-2.9 C
New York
Sunday, December 28, 2025

ஜேவிபி தலைமையகத்தில் சுவிஸ் தூதுவர் – ரில்வினை சந்தித்தார்.

ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வாவை இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் பேசியுள்ளார்.

பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அண்மையில் இலங்கையின் நாடாளுமன்றக் குழுவொன்று சுவிற்சர்லாந்திற்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லெட்டும் கலந்து கொண்டுள்ளார்.

Related Articles

Latest Articles