18.3 C
New York
Monday, September 8, 2025

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்‘ என்ற நுண்ணுயிர்

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்‘ என்ற நுண்ணுயிர் இனம்காணப்பட்டதையடுத்து பாகிஸ்தானுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து ரஷ்யாவுக்கு அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் மாத்திரம் சுமார் 40 லட்சம் தொன் அளவுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது பாகிஸ்தானின்  பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகிக்கின்றது.

இந்நிலையிலேயே பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர் இருப்பது  கண்டறியப்பட்டதோடு இது ரஷ்யாவின் உணவு பாதுகாப்பு தரத்தை மீறுவதாகவும்  குற்றம் சாட்டப்பட்டது.

Related Articles

Latest Articles