தனுஷ் ஒரு மனுஷனா?.. ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா? என தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு இரு ஆண் குழந்தைகளை பெற்றுள்ளார். பல வருடங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், திடீரென கடந்த 2022ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இருவரும் இணைந்து வாழ வேண்டும் என பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தனுஷ் – ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க..
\போட்டுத்தாக்கிய பிரபலம் இருவரும் இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்கிற முடிவை எடுத்து நிரந்தரமாக பிரிய முடிவு செய்தது மிகப்பெரிய தவறு என தயாரிப்பாளர் கே. ராஜன் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள் தெய்வம் கிடையாது: ரஜினிகாந்த், அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே சினிமாவை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்க என வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் இருவரும் இப்போதும் தங்கள் குடும்பத்தை நல்லபடியாக பார்த்து வருகின்றனர். நடிகர்கள் நடித்த படங்கள் பிடித்திருந்தால் ஒரு நாள் போய் பாருங்கள். அவர்கள் மீது பைத்தியமாக வேண்டாம்.
உங்கள் குடும்பத்தை முதலில் பாருங்கள் என தனது பேச்சை ஆரம்பித்த கே. ராஜன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து விஷயத்தை கையில் எடுத்து பேசியுள்ளார். பல பெண்களோடு வாழ்க்கை எதுக்கு?: நடிகர் தனுஷ் ஒளிவு மறைவின்றி நேரடியாகவே கேட்கிறேன்.
பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை வாழ வேண்டும் உனக்கு என கே. ராஜன் நடிகர் தனுஷ் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.