பெருந்தொகை பண வைப்பில் எடுக்கப்படும் படங்கள் சமீபகாலமாக வெளியாகி தோல்வியை சந்தித்து வருகிறது. ஆனால் முன்பு வெளியான சூப்பர் ஹிட் படங்களை புதுப்பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
அவ் படங்கள் எதிர்பார்க்காத அளவு வசூலை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டில் 10 கோடிக்கு மேல் ரீ ரிலீஸில் வசூல் செய்த படங்கள் நான்கு உள்ளது. அதில் ஹாலிவுட் படங்களுக்கு போட்டியாக விஜய்யின் கில்லி படமும் வசூல் செய்திருக்கிறது.
தரணி இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா காம்போவில் வெளியான கில்லி படத்திற்கு பேர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
தொலைக்காட்சியில் என்ன தான் கில்லி படத்தை பார்த்தாலும் திரையரங்குகளில் இப்போது பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.