சுமார் 1,500 கட்டுமானத் தொழிலாளர்கள் நேற்று சூரிச் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர மையத்தில் கூடியிரந்தனர். இதனால் சூரிச்சில் உள்ள பெரும்பாலான கட்டுமானத் தளங்கள் ஸ்தம்பித்த நிலையில் இருந்தன என்று யூனியா மற்றும் சினா தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
மத்திய மற்றும் கிழக்கு சுவிட்சர்லாந்து மற்றும் கிராபுண்டன் மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் சேர நகரத்திற்கு வந்தனர்.
பேரணிக்குப் பிறகு, பிற்பகலில் கட்டுமானத் தொழிலாளர்கள் நகரம் முழுவதும் சத்தமாக அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் ஊர்வலம் சுவிஸ் கட்டுமான முதலாளிகள் சங்கத்தின் (SSE) தலைமையகத்தின் முன் முடிந்தது.
பல வாரங்களாக, சுவிட்சர்லாந்து முழுவதும் கட்டுமானத் தொழிலாளர்கள் 80,000 தொழிலாளர்களைப் பாதிக்கும் புதிய தேசிய கூட்டுத் தொழிலாளர் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக மேம்பாடுகளைக் கோரி அணிதிரண்டு வருகின்றனர்.
அவர்கள் குடும்பத்திற்கு ஏற்ற வேலை நேரங்களையும், காலை இடைவேளைக்கான ஊதியத்தையும் விரும்புகிறார்கள்.
மூலம்- swissinfo

