லூசேர்ன் ட்ரையன்ஜென் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று அவசர தரையிறக்கக்கப்பட்டுள்ளது.
நேற்று 12:15 மணிக்கு சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
ஒற்றை இயந்திர விமானம் எதிர்பாராத விதமாக தரையிறங்கத் தொடங்கியது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
விமானி உள்ளிட்ட 4 பயணிகள் விமானத்தில் இருந்தனர். ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ட்ரையன்ஜென் பிராந்திய தீயணைப்புப் படை, சர்சி பிராந்திய தீயணைப்புப் படை, அம்புலன்ஸ் சேவை மற்றும் மீட்பு ஹெலிகொப்டர் போன்ற அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன.
பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர் விமானத்தில் இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அவசர நிலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு வாரியம் மற்றும் பெடரல் வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
மூலம்- bluewin

