சோலோதர்ன், கிரென்சென்னில் உள்ள ஒரு தரைக்கீழ் வாகனத்தரிப்பிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 கார்கள் தீக்கிரையாகியுள்ளன.
நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அருகே அமைந்திருந்த தரைக்கீழ் தரிப்பிடத்தில் தீ பரவியதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 20 வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து அழிந்துள்ளன.
காரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தீ விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.

