A3 வீதியில், Mumpf அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறியின் பின்புறத்தில் ஒரு கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில். 50 வயதான ஜெர்மன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 8:50 மணியளவில், சூரிச் நோக்கிச் செல்லும் A3 மோட்டார் பாதையில் ஒரு போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.
18 வயது ஓட்டுநர் ஒருவர் BMW காரின் மீதான கட்டுப்பாட்டை இழந்து நிலையில்,அவரது வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்து A3 வீதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
இதனால் ஒரு லொறி நிறுத்தப்பட்டது. சுமார் இரவு 11:40 மணியளவில், அதன் பின்புறத்தில் ஒரு கார் மோதியது.
முழுமையாக சேதமடைந்த காரில் 50 வயது ஜெர்மன் நபர் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
மூலம்-20min.

