சுவிட்சர்லாந்திலிருந்து 2.6 மெட்ரிக் தொன் பேரிடர் நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற விமானம் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
நீர் சுத்திகரிப்பு அலகுகள் மற்றும் தொடர்புடைய செயல்பாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட 17 பொதிகள் இந்த விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சூரிச்சிலிருந்து புறப்பட்ட எடெல்வைஸ் ஏர் விமானம் WK 064 இந்த நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ளது.

