சுவிஸ் பொருட்களுக்கு விதிக்கப்படும் அமெரிக்க வரிகள் நவம்பர் 14 முதல் அமலுக்கு வரும் வகையில் 39% இலிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்ட பிரகடனத்தின் அடிப்படையில் இந்தக் வரிக் குறைப்பு இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கூடுதல் வரியை அமெரிக்கா அதிகபட்சமாக 15% ஆக மட்டுப்படுத்தியுள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான அரச செயலகம் (SECO) புதன்கிழமை அறிவித்தது.
அதற்கு ஈடாக, சுவிட்சர்லாந்து சில மீன் மற்றும் விவசாயப் பொருட்களின் இறக்குமதி வரிகளைக் குறைத்து வருகிறது.
சில துறைகள் மற்றும் பொருட்கள் தற்போது அமெரிக்காவின் கூடுதல் வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன, மருந்துகள், சில இரசாயனங்கள், தங்கம் மற்றும் கோப்பி போன்றவற்றுக்கு இத்தகைய விலக்குகள் உள்ளன.
அமெரிக்கா மற்ற சுவிஸ் ஏற்றுமதி பொருட்களுக்கான முழுமையான கூடுதல் வரிகளையும் ரத்து செய்கிறது. இவற்றில் விமானங்கள், விமானப் போக்குவரத்து தொடர்பான சில பாகங்கள், ரப்பர் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பொதுவான பொருட்கள் அடங்கும்.
வரிக் குறைப்பு பட்டியல் அமெரிக்க கூட்டாட்சி பதிவேட்டில் வெளியிடப்படும்.
மூலம்- swissinfo

