பெர்ன் மாகாணத்தில் உள்ள ப்ரூக் அருகே A5 வீதியில் புதன்கிழமை இரவு 8.20 மணியளவில் ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ப்ரூக்மூஸ் சந்திப்பில், ஒரு ஓட்டுநர் லாங்ஹோல்ஸ் சுரங்கப்பாதை வழியாக ப்ரூக் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சுரங்கப்பாதைக்கு வெளியே உள்ள கொன்கிரீட் சுவரில் மோதினார்.
பின்னர் கார் தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது. விபத்து நடந்த இடத்திலேயே ஓட்டுநர் இறந்தார். இறந்தவரை அடையாளம் காணும் பணி இன்னும் நிலுவையில் உள்ளது.
மூலம்-bluewin

