உபர் நிறுவனம் சுவிட்சர்லாந்திற்கான தனது முதல் வருடாந்த மதிப்பாய்வை வெளியிட்டுள்ளது.இதன்படி, இந்த ஆண்டுக்குள் ஒரு பயணி, 1260 பயணங்களை மேற்கொண்டுள்ளார், இது நாடு தழுவிய சாதனையாகும்.
மிக நீண்ட பயணம் பாசலிலிருந்து பெல்லிவில்லே (F) வரையிலான- 323 கிலோமீட்டர் தூரம் கொண்டது
இந்த ஆண்டு 15 மாகாணங்களில் இருந்து 26 மாகாணங்களுக்கும் இந்த செயலி விரிவுபடுத்தப்பட்டது, இப்போது சுவிட்சர்லாந்து முழுவதும் இந்த வசதி கிடைக்கிறது.
இந்த ஆண்டு மதிப்பாய்வின்படி,
சராசரி காத்திருப்பு நேரம்: 4 நிமிடங்கள் 36 வினாடிகள்
அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட பயணங்கள்: 1260 (சுவிஸ் சாதனை)
நீண்ட பயணம்: பாசலில் இருந்து பெல்லிவில் (F) வரை 323 கி.மீ
அதிகபட்ச சலுகை: 151 சுவிஸ் பிராங்குகள் (ஜெனீவாவில் செலுத்தப்படுகிறது)
அதிக சலுகைகள் பெர்ன், லூசெர்ன் மற்றும் வாலைஸில் கொடுக்கப்பட்டுள்ளன. குறைந்த சலுகைகள் வௌட், டிசினோ மற்றும் ஃப்ரிபோர்க் மண்டலங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
மூலம்-20min

