ஜெனீவாவை தளமாகக் கொண்ட நிறுவனமான ஆல்சீட்ஸ் குழுமத்தின் சூரியகாந்தி எண்ணெய் இருப்புக்கள் மீது உக்ரைனின் ஒடெசா அருகே ரஷ்யாவினால் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
“ஒடெசாவிலிருந்து 50 கிலோமீட்டர் கிழக்கே உள்ள பிவ்டென்னி துறைமுகத்தில் உள்ள எங்கள் வசதிகள் நேற்று மாலை மற்றும் இன்று காலை குண்டுவீசித் தாக்கப்பட்டன. மூன்று டாங்கிகள் இன்னும் தீப்பிடித்து எரிகின்றன,” என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கீஸ் வ்ரின்ஸ் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான தொன் எண்ணெய் நிச்சயமாக இழக்கப்பட்டுள்ளது. “தற்போது, நாங்கள் தீயை அணைக்க முயற்சிக்கிறோம். அயலில் உள்ள சேமிப்பு வசதிகளுக்கும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எதிராக நிறுவனம் காப்பீடு செய்யப்படவில்லை என்றும் விளக்கினார். போர் தொடங்கியதிலிருந்து எட்டாவது முறை நடத்தப்பட்டுள்ள குண்டுவீச்சுத் தாக்குதல்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

