ஒரு மாதத்திற்குள் சுமார் 652,000 பேர் சுவிட்சர்லாந்தின் மொண்ட்ரியக்ஸில் உள்ள கிறிஸ்மஸ் சந்தையைப் பார்வையிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு சந்தை அதிக இளம் பார்வையாளர்களையும் சர்வதேச விருந்தினர்களையும் ஈர்த்துள்ளது.
மொண்ட்ரியக் நகர கிறிஸ்மஸ் சந்தையை பிராந்திய நாட்டுப்புற இசை, இசைப் பள்ளிகள், ஜாஸ், பொப்-ரொக், நற்செய்தி மற்றும் டிஜே செட்களை இணைந்த சுமார் 51 இசை நிகழ்ச்சிகள் உற்சாகமூட்டியிருந்தன.
கடந்த ஆண்டு, சுமார் 550,000 பேர் இந்தச் சந்தையைப் பார்வையிட்டிருந்தனர்.
மூலம்- swissinfo

