கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வில் கலந்து கொள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தீ விபத்தில் பலியானவர்களில் இரட்டையர்களான பிரெஞ்சு-சுவிஸ் நாட்டவர்கள் உட்பட ஒன்பது பிரெஞ்சுக்காரர்களும் அடங்கியுள்ளனர்.
திங்களன்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் மௌட் பிரீஜியன் இதனை அறிவித்துள்ளார்.
பிரெஞ்சு ஜனாதிபதியுடன் ஐரோப்பாவிற்கான அமைச்சர் பிரதிநிதி பெஞ்சமின் ஹடாடும் வருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்- swissinfo

