4.8 C
New York
Sunday, March 29, 2026

தீவிபத்தில் காயமடைந்த 116 பேரும் இனங்காணப்பட்டனர்.

கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள லெ கொன்ஸ்டெல்லேஷன் பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 119 லிருந்து 116 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் அடையாளம் காணும் நடவடிக்கைகளை வாலெய்ஸ் கன்டோனல் பொலிஸ், DVI (பேரிடர் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல்) மற்றும் தடயவியல் மருத்துவ நிறுவனம் ஆகியன மேற்கொண்டதாக அறிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 116 பேரில் 83 பேர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில், அதிகாரிகள் 119 பேர் காயமடைந்ததாக கூறியிருந்தனர். அன்றிரவு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்ததாக தவறாக கணக்கிடப்பட்டிருந்தனர்.

இதையடுத்து காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக திருத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 68 சுவிஸ் பிரஜைகள் (21 பெண்கள் மற்றும் 47 ஆண்கள்), 21 பிரெஞ்சுக்காரர்கள், 10 இத்தாலியர்கள், இரண்டு போலந்துக்காரர்கள், ஒரு பெல்ஜியன், ஒரு போர்த்துகீசியர், ஒரு செக், நான்கு செர்பியர்கள், ஒரு ஒஸ்ரேலியர், ஒரு போஸ்னியன், ஒரு கொங்கோலியர், ஒரு லக்சம்பர்கர், அத்துடன் இரட்டை தேசியம் கொண்ட நான்கு பேர் (பிரான்ஸ்/பின்லாந்து, சுவிட்சர்லாந்து/பெல்ஜியம், பிரான்ஸ்/இத்தாலி மற்றும் இத்தாலி/பிலிப்பைன்ஸ்) அடங்குகின்றனர்.

அதேவேளை, தீ விபத்தில் இறந்த நாற்பது பேரை அடையாளம் காணும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.

இறந்தவர்களில் இருபது பேர் சிறார்களாவர், இளையவர்கள் 14 வயதுடையவர்கள். ஆறு பேர் மட்டுமே 23 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். இறந்தவர்களில் பெரும்பாலோர் – இருபத்தி இரண்டு பேர் – சுவிஸ் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles