26.4 C
New York
Tuesday, June 9, 2026

டாவோஸ் மாநாடு தொடங்கியது – உக்ரைன் ஜனாதிபதியும் வரமாட்டார்.

உலகப் பொருளாதார மன்ற கூட்டம் இன்று டாவோசில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

உலகப் பொருளாதார மன்ற தலைமை நிர்வாக அதிகாரி போர்ஜ் பிரெண்டே இன்று காலை 10:30 மணிக்கு தலைமை உரை நிகழ்த்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதையடுத்து. சுவிஸ் ஜனாதிபதி கை பர்மெலின் , ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான் டெர் லேயன், சீனாவின் துணைப் பிரதமர் ஹே லைஃபெங்,உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநாடு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

நேற்று இரவு நடந்த ரஷ்யாவின் பாரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கியேவில் இருக்க முடிவு செய்துள்ளார். இதனால் அவர் டாவோஸ் மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் மற்றும் ஸ்பெயினை அடுத்து, உலக பொருளாதார மன்றத்தில் (WEF) பங்கேற்பதை ரத்து செய்த மூன்றாவது தலைவர் இவராவார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles