24.9 C
New York
Tuesday, March 31, 2026

டாவோஸ் மாநாட்டு விருந்தினர்களை உறங்க வைத்த ட்ரம்ப்.

டாவோஸ் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தப்பும் தவறுமாக நீண்ட உரை நிகழ்த்தியுள்ளார்.

நேற்று தாமதமாக டாவோஸ் வந்து சேர்ந்த அவர் உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றினார். 45 நிமிடங்கள் அவரது உரை திட்டமிடப்பட்டிருந்த போதும், ஒன்றரை மணித்தியாலங்களாக அது நீண்டிருந்தது.

அவரது உரையை எதிர்பார்த்திருந்த விருந்தினர்கள் இந்த நீண்ட உரையினால் எரிச்சலடைந்து, பலர் தூக்கத்தில் இருந்தனர்.

இந்த உரையில் ட்ரம்ப் ஐரோப்பா தவறான பாதையில் செல்வதாக குற்றம்சாட்டினார்.

அத்துடன், கிறீன்லாந்தை ஐஸ்லாந்து என்றும், ஐஸ்லாந்தை கிறீன்லாந்து என்றும் மாறி மாறி குழப்பிக் கொண்டார்.

சுவிஸ் ஜனாதிபதியை பிரதமர் என்றும் அவர் அவ்வப்போது குறிப்பிட்டிருந்தார்.

அவரது உரையில் ஐந்து முக்கிய தவறுகள் இருந்ததாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles