கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ அமைக்கப்பட உள்ள அறக்கட்டளைக்கு வலைஸ் மாகாண அரசு 10 மில்லியன் பிராங்குகளை வழங்க உள்ளது.
அத்துடன் இறந்தவர்களின் இறுதிச் சடங்கு மற்றும் நாடு திரும்பும் செலவுகளையும் வலைஸ் அரசாங்கம் செலுத்தும்.
செலவுகள் காப்புறுதியால் ஈடுகட்டப்படுமா என்பது குறித்த மதிப்பீட்டிற்காக காத்திருக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் வழங்கும்.
இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் தவிர, நிகழ்வின் போது நிறுவனத்தில் இருந்தவர்கள், ஒருவரைக் காப்பாற்ற உள்ளே நுழைந்தவர்கள், அதேபோல் சோகத்தின் உடனடி அருகாமையில் இருந்தவர்கள் ஆகியோரையும் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படுகின்றனர்.
மூலம்- swissinfo

