25.6 C
New York
Saturday, July 4, 2026

சுவிஸ் விமான நிறுவனம் இசைக்கருவிகளுக்கு புதிய கட்டுப்பாடு.

மார்ச் 1 ஆம் திகதி முதல், சுவிஸ் விமான சேவைப் பயணிகளுக்கு புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கைப்பையில் இசைக்கருவிகளைக் கொண்டு செல்வதற்கு இந்த விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இசைக்கருவிகளின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் கூட்டுத்தொகை 125 சென்டிமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சுவிஸ் விமான நிறுவனம் மார்ச் 29 முதல் சூரிச்சிலிருந்து போலந்தின் போஸ்னானுக்கு வாரத்திற்கு மூன்று விமானங்களுடன் புதிய நேரடி இணைப்பைத் தொடங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles