0.2 C
New York
Monday, March 2, 2026

மத்திய கிழக்கில் விரிவடையும் தாக்குதல்கள்.

ஈரான் மீதான அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளுக்கு மோதல்கள் விரிவடைந்துள்ளன.

பஹ்ரைனில், வான் பாதுகாப்புப் படைகளால் இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதைவுகள், ஒரு கப்பலின் மீது விழுந்து தீப்பிடித்ததில், ஆசிய மாலுமி ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மனாமாவிற்கு அருகிலுள்ள துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட தீ பின்னர் அணைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை,மீது ஈரானிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 61 ஏவுகணைகள் மற்றும் 34 ட்ரோன்களை இடைமறித்ததாக பஹ்ரைன் கூறுகிறது.

அதேவேளை, சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் விமானத் தளமான அக்ரோதிரி மீது ஒரு ட்ரோன் மோதி வெடித்துள்ளது. அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, சிறிய சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது. .

இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, பெய்ரூட்டில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா நிலைகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

லெபனானில் கிட்டத்தட்ட 50 கிராமங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, ஈரானில் இருந்து ஏவப்பட்ட 152 பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 506 ட்ரோன்களை இடைமறித்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராணுவம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles