குஷெல்முத்தில் அகழ்வுப் பணியின் போது ஒருவர் புதையுண்டு மரணமானார் என ஃப்ரீபர்க் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை, மாலை 4:30 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
55 வயதுடைய ஒருவர் தண்ணீர் குழாயை சரிசெய்ய சுமார் இரண்டு மீட்டர் ஆழத்தில் அகழ்வு இயந்திரத்தை பயன்படுத்தி தோண்டிக் கொண்டிருந்த போது, இமண் சரிந்து அவரை புதைத்ததாக கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விரைவான உதவி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த நபர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்துள்ளார்.
மூலம்- bluewin

