எடெல்வைஸ் விமான நிறுவனத்தின் இரண்டு சிறப்பு விமானங்கள் 404 பயணிகளுடன் இன்று ஓமானில் இருந்து சூரிச்சிற்கு புறப்பட்டுள்ளன.
இரண்டு எடெல்வைஸ் விமானங்களும் மஸ்கட் மற்றும் சலாலாவிலிருந்து புறப்பட்டு, முறையே மாலை 4.30 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் சூரிச் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானத்தில் 215 சுவிஸ் நாட்டவர்கள் இருப்பதாக விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் பயணிகளை இலக்காகக் கொண்டதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலின் விளைவாக பல்வேறு வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான சுவிஸ் நாட்டவர்கள் சி்க்கியுள்ளனர்.
வியாழக்கிழமை பிற்பகல், சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் இயக்கும் ஒரு சிறப்பு விமானம் மஸ்கட்டில் இருந்து 211 பேருடன் சூரிச் வந்தது.
மூலம்- swissinfo

