8.5 C
New York
Saturday, March 7, 2026

கோர விபத்தில் ஒருவர் பலி- 4 பேர் படுகாயம்.

லூசெர்னில் உள்ள எஸ்கோல்ஸ்மாட்-மார்பாக்கில் இன்று நடந்த ஒரு கோர விபத்தில் 33 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்ததாக லூசெர்ன் பொலிஸ் தெரிவித்துள்ளது.

லென் கிராமத்திற்கு அருகில் காலை 7:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

எஸ்கோல்ஸ்மாட்டில் இருந்து ஷாஃப்ஹெய்ம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ​​முந்திச் செல்ல முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து, கார் சறுக்கி, எதிரே வந்த வாகனத்தில் மோதியது.

விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் படுகாயமடைந்தார். எதிரே வந்த காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவர்களை அம்புலன்ஸ் மற்றும் ஹெலிகொப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

விபத்து தொடர்பாக ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles