சூரிச் மாகாணத்தில் உள்ள ரெஜென்ஸ்டோர்ஃப் என்ற இடத்தில் நேற்று பிற்பகல் நடந்த விபத்தில் குழந்தை ஒன்று படுகாயம் அடைந்தது.
நேற்றுபிற்பகல் சுமார் 3:45 மணியளவில் 52 வயதுப் பெண் ஒருவர் தனது காரை வாகன நிறுத்துமிடத்திலிருந்து வெளியே ஓட்டிச் சென்றார்.
அதே நேரத்தில், நான்கு வயது சிறுமி ஒருவர் வாகன நிறுத்துமிடத்தின் மூலையில் ஓடி வந்தபோது, தடுக்கி விழுந்தார்.
ஓட்டுநர் அந்தக் குழந்தையின் மீது காரை ஏற்றினார். படுகாயம் அடைந்த அக்குழந்தை, லிம்மாட்டல் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சூரிச் மாகாண காவல்துறையும், சூரிச் தடயவியல் நிறுவனமும் சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்தன.
இந்த விபத்து குறித்த விசாரணையை மாகாண காவல்துறையும், சீ/ஓபர்லாந்து அரசு வழக்கறிஞர் அலுவலகமும் நடத்தி வருகின்றன.
மூலம்- 20min

