கனடா, ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து மற்றும் மேலும் ஏழு நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “லெபனானில் சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளன.
“லெபனானில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை மற்றும் இடம்பெயர்வு நெருக்கடி குறித்து இந்த நாடுகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன.
குறிப்பாக, பொதுமக்களும் பொது உள்கட்டமைப்புகளும் இந்த மோதல்களின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அந்த நாடுகள் வரவேற்றன. இருப்பினும், லெபனானிலும் இப்போது ஆயுதங்கள் அமைதியாக வேண்டும் .
பத்து நாடுகளும் மனித கண்ணியத்தைப் பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கவும் “சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்துள்ளன.
“தெற்கு லெபனானில் ஐ.நா. அமைதிப்படையினரின் மரணங்களுக்கு வழிவகுத்த மற்றும் மனிதாபிமானப் பணியாளர்களுக்கான அபாயங்களை கணிசமாக அதிகரித்த செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என்று அது கூறுகிறது.
வொஷிங்டனில் இஸ்ரேலிய மற்றும் லெபனான் பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த ஆரம்பகட்ட சந்திப்பைத் தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா, பிரேசில், கனடா, கொலம்பியா, இந்தோனேசியா, ஜப்பான், ஜோர்டான், சியரா லியோன், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் இணைந்து இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
மூலம்- swissinfo

