16.3 C
New York
Sunday, October 4, 2026

ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை திறக்க சுவிஸ் அரசாங்கம் ஆதரவு.

தற்போதுள்ள நான்கு ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் பதிலாக, ஆண்டுக்கு 12 ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறந்திருப்பதை ஆதரிப்பதாக சுவிஸ் அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. இந்தப் பரிந்துரை தொழிற்சங்கங்களால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செனட்டின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வரிவிதிப்புக் குழுவின் முன்மொழிவை, கூட்டாட்சி மன்றம் வரவேற்பதாக ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இருப்பினும், இந்த நடவடிக்கையைச் செயல்படுத்துவதா, எப்படிச் செயல்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் மாகாணங்களுக்கு இருக்கும் என்பதால், அரசாங்கம் அவற்றின் தன்னாட்சியை மதிக்கும்.

செனட் குழுவின் இந்த முன்மொழிவு, 2023-ல் சூரிச் மாகாணத்தால் முன்வைக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற முன்முயற்சியைச் செயல்படுத்துகிறது. இது தொழிலாளர்களின் உடல்நலப் பாதுகாப்பின் மீதான நேரடித் தாக்குதல் என்று தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles