15.4 C
New York
Tuesday, May 5, 2026

ஜெனீவா ஏரி வருடாந்த சுத்திகரிப்பில் 2,592 கிலோ குப்பைகள் சேகரிப்பு.

ஜெனீவா ஏரியின் வருடாந்த வசந்தகால தூய்மைப்பணியின் போது, ​​ நீரிலிருந்து 2,592 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

கடந்த வாரம் நடந்த இந்த 13 வது தூய்மைப்பணியில், 300 சுழியோடிகள் மற்றும் ஸ்நோர்கெலிங் செய்பவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வு, பிரான்சில் உள்ள நியான், மோர்ஜஸ், ரோல் மற்றும் எவியான் வழியாக, கொலோக்னி முதல் வெவே வரை, ஜெனீவா ஏரியைச் சுற்றியுள்ள பத்து இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

சேகரிக்கப்பட்ட குப்பைகளின் மொத்த அளவு குறைந்து வரும் நிலையில், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யும் ‘அசோசியேஷன் போர் லா சாவ்கார்ட் டு லேமன்’ (ASL) அமைப்பு, நெகிழி கழிவுகள் மற்றும் அன்றாடப் பொருட்களின் குறிப்பிடத்தக்க இருப்பு இருந்ததாகக் கூறுகிறது.

மொத்தத்தில், 424 கிலோ நெகிழிகளும், “சுற்றுச்சூழலுக்கு குறிப்பாகப் பிரச்சினையான” 41 கிலோ PET-யும் மீட்கப்பட்டன.

மேலும், குறிப்பாக கிரான்ஜெட்ஸ் பகுதியில், காது குடையப் பயன்படுத்தும் பஞ்சு குச்சிகளும் அதிகளவில் காணப்பட்டுள்ளது. அங்கு சேகரிக்கப்பட்ட 1,088 குச்சிகள் காணப்பட்டன. மக்கள் அவற்றை கழிப்பறையில் போட்டு ஃபிளஷ் செய்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

பல்வேறு இடங்களில், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய மற்றும் மீண்டும் நிரப்பக்கூடிய என மொத்தம் 88 மின்னணு சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. வழக்கமான சிகரெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டன, மேலும் 36,600 சிகரெட் அடித்துண்டுகள் சேகரிக்கப்பட்டன.

சேகரிக்கப்பட்ட மற்ற குப்பைப் பொருட்களில் 150 லைட்டர்கள், 44 டயர்கள், 10 நைட்ரஸ் ஒக்சைடு போத்தல்கள், ஏழு ஸ்கூட்டர்கள், ஒரு ட்ரோன், ஒரு கணினி, ஒரு ஏணி, ஒரு கார் பட்டரி, ஒரு படகின் கதவு மற்றும் ஒரு நங்கூரம் ஆகியவை அடங்கும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles