29.5 C
New York
Thursday, July 2, 2026

சுவிசில் எரிபொருள் விலைகள் சிறியளவில் வீழ்ச்சி.

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலை மீண்டும் சற்று குறைந்துள்ளதாக சுவிட்சர்லாந்து சுற்றுலா கழகத்தின் (TCS) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாத இறுதியுடன் ஒப்பிடுகையில்,டீசலுக்காக நுகர்வோர் சற்று குறைவாகவே செலவு செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக எரிபொருள் நிரப்புவதற்காக செலவு உயர்ந்ததாகவே உள்ளது.

வாரத்தின் மத்தியில், ஒரு லிட்டர் அன்லெட்டட் 95 பெட்ரோலின் சராசரி விலை 1.89 பிராங்,அன்லெட்டட் 98 பெட்ரோலின் விலை 2.00 பிராங் மற்றும் டீசலின் விலை 2.14 பிராங்என TCS அறிக்கை வெளியிட்டது. இதன் பொருள், பெட்ரோல் விலை அதன் சமீபத்திய உச்ச விலையிலிருந்து 0.01பிராங் குறைந்துள்ளது.

கடைசி TCS அறிக்கைக்குப் பிறகு, ஒரு லிட்டர் டீசலின் சராசரி விலை 0.03 பிராங் குறைந்துள்ளது. பரபரப்பான ஈஸ்டர் விடுமுறைகள் தொடங்குவதற்கு முன்பு, ஈரான் போர் தொடங்கியதிலிருந்து முன்னர் இல்லாத அளவுக்கு டீசல் விலை ஒரு லிட்டருக்கு 2.24 பிராங் ஆக அதன் உச்சத்தை எட்டியிருந்தது.

பிப்ரவரி மாத இறுதியில் – மோதல் தொடங்குவதற்கு முன்பு – அன்லெட்டட் 95 பெட்ரோல் விலை 1.67 பிராங்ஆகவும், அன்லெட்டட் 98 பெட்ரோல் விலை 1.78 பிராங் ஆகவும், டீசல் விலை 1.79 பிராங் ஆகவும் இருந்தது என TCS தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை இப்போது சுமார் 13% அதிகமாகவும், டீசல் விலை 20% அதிகமாகவும் உள்ளது. இந்தத் துறையில் அதிகரித்த தேவையே டீசல் விலையில் ஏற்பட்ட இந்த வலுவான உயர்வுக்குக் காரணம் என அந்தப் போக்குவரத்து அமைப்பு விளக்குகிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles