சூரிச்சில் வார இறுதியில் ஏற்பட்ட கலவரம் கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்து, காவல்துறை அதிகாரிகள் மீது போத்தல்கள், கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில், காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல்துறையினர் ரப்பர் குண்டுகளைச் சுடவும், நீர்த் தெளிப்பான்களைப் பயன்படுத்தவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, அங்கு வந்த ரோந்துப் படையினர் மீது ஒரு பெரிய கும்பல் போத்தல்களையும் கற்களையும் வீசியது.
பின்னர் காவல்துறையினர் பின்வாங்கி, கூடுதல் படையினரை வரவழைத்து, இறப்பர் குண்டுகளையும் நீர்த் தெளிப்பான்களையும் பயன்படுத்தினர்.
கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த, கூடுதல் படையினர் நீர்த்தாரை பீரங்கியையும் நாய்களையும் பயன்படுத்தினர்.
ஒரு காவல்துறை அதிகாரி மீது பொருள் ஒன்று தாக்கியதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன.
அந்தக் கும்பலின் தாக்குதலில் ஒரு காவல்துறை வாகனமும் சேதமடைந்தது.
மூலம்- swissinfo

