சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு ஒரு நபருக்கான சுகாதாரச் செலவுகள் கூடுதலாக 247 பிராங்குகளால் அதிகரித்தன. இந்த ஆண்டு இந்த நிலை தொடரும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், வரும் இலையுதிர் காலத்தில் காப்புறுதித் தொகைகள் சுமார் 5% உயரக்கூடும்.
பெர்னில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில், கூட்டாட்சி பொது சுகாதார அலுவலகத்தின் (FOPH) நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
“சராசரியாக, செலவுகள் அதிகரிக்கும் அதே வீதத்தில் காப்புறுதித் தொகைகளும் அதிகரிக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று காப்புறுதி மேற்பார்வைப் பிரிவின் தலைவர் பிலிப் முரி கூறினார்.
காப்புறுதி நிறுவனங்கள் தற்போது 2026-ஆம் ஆண்டிற்கு 5%-க்கும் சற்றுக் குறைவான செலவு அதிகரிப்பைக் கணித்துள்ளன.
மூலம்-swissinfo

