துர்காவ் மாகாணத்தின் வெயின்ஃபெல்டன் பகுதியில் உள்ள ஒரு ரயில்வே கடவையில் யில் மோதியதில் 55 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அந்தப் பெண், சனிக்கிழைமை மதியம் 1 மணியளவில், ஃப்ரீஸ்ட்ராஸ் ரயில்வே கடவையில் மின்சார சக்கர நாற்காலியில் சென்று கொண்டிருந்தார்.
பெர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், அவசரகால பிரேக்கை இயக்கிய போதிலும், அவர் மீது மோதியது.
படுகாயமடைந்த அந்த 55 வயதுப் பெண், விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
மூலம்- bluewin

