பாதிக்கப்பட்டோருக்கான இலவச உதவி எண் 142, மே 1 ஆம் திகதி முதல் இணையத்தில் செயல்பட்டு வருகிறது. நாடு தழுவிய இந்த உதவி எண், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள ஆதரவை விரைவாகவும் எளிதாகவும் அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனிப்பட்ட அல்லது பொது இடங்களில் உடல், உளவியல் அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்த எவரும் இதைப் பயன்படுத்தலாம்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் சமூக வட்டத்தில் உள்ள ஆதரவான நபர்களும் இதன் இலக்குக் குழுவில் அடங்குவர்.
தொலைபேசியில் உள்ள வல்லுநர்கள் தகவல்களை வழங்கலாம், சூழ்நிலையை மதிப்பிடலாம், செவிமடுக்கலாம், மேலும் பாதிக்கப்பட்டவர் கோரினால், அவர்களை மற்ற சிறப்புச் சேவைகளுக்குப் பரிந்துரைக்கலாம்.
இது ஒரு அவசர எண் அல்ல. அவசர காலத்தில், பாதிக்கப்பட்டவர்கள் 117 என்ற எண்ணில் காவல்துறையை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த எண் ஏற்கனவே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுவிஸ் மாகாண சமூக விவகார இயக்குநர்கள் மாநாட்டின் (SODK) பொதுச் செயலாளர் கேபி ஸோலோசி, ப்ளூ நியூஸிடம் கூறியதாவது:
“மே மாதத்தில், 142 என்ற எண்ணுக்கு 2,600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன, அவை அனைத்தும் உரையாடலில் முடிந்தன. இது ஒரு நாளைக்குச் சராசரியாக சுமார் 80 அழைப்புகள் ஆகும்.”
மேலும், அழைப்பாளர்கள் அழைப்பு மணி ஒலிக்கும்போதோ அல்லது பதிவு செய்யப்பட்ட செய்தியின்போதோ இணைப்பைத் துண்டிக்கும் சோதனை அழைப்புகளும் அதிக எண்ணிக்கையில் இருந்தன.என்று தெரிவித்துள்ளார்.

