இஸ்ரேல் மீது ஈரான் நேற்றிரவு ஏவுகணைகளை ஏவித் தாக்கியதை அடுத்து மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை தெரிவித்துள்ளது.
ஹைஃபாவுக்கு தென்கிழக்கே உள்ள ரமத் டேவிட் விமானப்படை தளத்தைத் தாக்க பலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி)கூறியுள்ளது.
இது “முழு வாரத்திற்கும் தொடர்ச்சியான தாக்குதல்களின்” ஆரம்பம் என்று அது தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானின் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேல் மீண்டும் “ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில்” ஈடுபட்டால், அதற்கான பதிலடி “மிகப் பெரியதாக” இருக்கும் என்றும், அப்பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் “அனைத்து” இலக்குகளும் அதில் அடங்கக்கூடும் என்றும் ஈரான் எச்சரித்தது.
இதற்குப் பதிலடியாக, மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இதையடுத்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன், எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.

