30.1 C
New York
Wednesday, August 12, 2026

ஜெனீவாவில் தரையிறங்கிய டிரம்ப் – விமானத்தில் இருந்து ஹெலிக்கு மாறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜெனீவா விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, அவரை சுவிஸ் ஜனாதிபதிகை பார்மெலின் மற்றும் சுவிட்சர்லாந்திற்கான அமெரிக்கத் தூதர் கலிஸ்டா கிங்ரிச் ஆகியோர் வரவேற்றனர்.

டிரம்ப் அமெரிக்க கடற்படை ஹெலிகொப்டரில் ஏறுவதற்கு முன்னர், விமான ஓடுபாதையில் சில கணங்கள் மட்டுமே இருந்தார்.

சிறிது நேரத்திற்குப் பின்னர், அந்த ஹெலிகொப்டர் மற்ற இராணுவ விமானங்களுடன் சேர்ந்து, பிரான்சின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரை நோக்கிப் புறப்பட்டது.

இதன் போது, ஜெனீவா விமான ஓடுபாதையில் அசாதாரண பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஜெனீவா ஏரிக்கரையில் உள்ள அந்த பிரெஞ்சு நகரில் ஜி7 உச்சிமாநாடு நடைபெறும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக டிரம்ப் ஜெனீவா ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles