வடக்கு சுவிட்சர்லாந்தின் ஃபிரான்ஃபெல்டில் உள்ள டேகல்பாச் ஆற்றில், நீர் மாசுபாடு காரணமாக பல நூறு மீன்களும் நண்டுகளும் இறந்துள்ளன.
மாசுபாட்டிற்கான காரணம் தற்போது தெரியவில்லை என துர்காவ் மாகாண காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த இறந்த உயிரினங்கள் கண்டறியப்பட்டன. இது அந்த நீரோடையின் பகுதியில் “மீன் இனங்களின் முழுமையான இழப்பைக்” குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swisssinfo


