பிரான்சின் சில பகுதிகளில் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்த்துள்ளது.
இதன்போது, பந்து அளவிலான ஆலங்கட்டிகள் விழுந்துள்ளன. இது வாகனங்களுக்கு பெரும் சேதங்களை விளைவித்துள்ளது.
ஆர்டெஷ் பகுதி குறிப்பாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த மின்கம்பிகளால் ஏற்பட்ட மின்வெட்டைத் தொடர்ந்து, சுமார் 600 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மாகாண நிர்வாகம் தெரிவித்தது. ஆர்டெஷ் பகுதியில் உள்ள பல திராட்சைத் தோட்டங்களும் சேதமடைந்தன.
மூலம்- bluewin


