23.1 C
New York
Thursday, July 30, 2026

75 ஆண்டுகளை எட்டிய 1951 அகதிகள் உடன்படிக்கை- பாதுகாக்க வலியுறுத்துகிறது சுவிஸ்.

செவ்வாய்க்கிழமை தனது 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய 1951 அகதிகள் உடன்படிக்கையை நிலைநிறுத்துமாறு, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு சுவிட்சர்லாந்து அழைப்பு விடுத்துள்ளது.

“தஞ்சம் கோரும் உரிமையை நிலைநிறுத்துவதற்கும் இந்த உடன்படிக்கையைப் பாதுகாப்பதற்கும் நாம் அனைவரும் கடமையுணர்வுடன் இருக்க வேண்டும்,” என்று குடியேற்றத்திற்கான அரச செயலாளர் வின்சென்சோ மசியோலி, இந்த உடன்படிக்கை முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடமான ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையில் ஆற்றிய உரையில் கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் பெரும் போராட்டத்திற்குப் பிறகு பெறப்பட்டிருந்தாலும், “நாம் அதை நமது சமூகங்களில் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும்”.

பாதுகாப்பு தேவைப்படுபவர்கள் மீது இன்னும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் மற்றும் ஆதாரமற்ற தஞ்சம் கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இந்த உடன்படிக்கை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles