14.6 C
New York
Sunday, September 27, 2026

பொது இடங்களில் இனி குப்பைகளை போட்டால் 250 பிராங் வரை அபராதம்.

ஒகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் சுவிட்சர்லாந்து முழுவதும் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இது ஒரு புதிய கூட்டாட்சி குப்பை கொட்டுதல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

- Advertisement -

சிகரெட் துண்டுகள் அல்லது நெகிழிப் பைகள் போன்ற சிறிய அளவிலான குப்பைகளுக்கு, 80 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்படலாம்.

17 லிட்டர் வரையிலான குப்பைகளுக்கு, 100 சுவிஸ் பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

110 லிட்டர் வரையிலான குப்பைகளுக்கு, 250 சுவிஸ் பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குப்பை கொட்டும் நபர் பிடிபடும் பட்சத்தில் அல்லது கழிவுகளை அங்கேயே விட்டுச் செல்லும் பட்சத்தில் இந்த அபராதம் விதிக்கப்படும்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles