இந்த ஆண்டின் இதுவரையிலான மிக உயர்ந்த வெப்பநிலை நேற்று பாசல்-பின்னிங்கனில் பதிவு செய்யப்பட்டது.
மெட்டியோஸ்விஸ் (Meteoschweiz) தகவலின்படி, பிற்பகல் 2:10 மணிக்குள் வெப்பநிலைமானி 39.7 டிகிரியை எட்டியது.
இது அல்ப்ஸ் மலைத்தொடரின் வடக்குப் பகுதியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த வெப்பநிலையின் மறுபதிப்பாகவும் அமைந்தது.
ஜூலை 7, 2015 அன்று, ஜெனீவாவிலும் 39.7 டிகிரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டதாக, மத்திய வானிலை மற்றும் காலநிலை ஆய்வு அலுவலகமான மெட்டியோஸ்விஸ் (MeteoSwiss), X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை அதிகபட்ச தினசரி குறைந்தபட்ச வெப்பநிலைக்கான சாதனையும் முறியடிக்கப்பட்டது. பாசல் அருகே உள்ள சென் கிரிஷோனாவில் (St. Crischona) காலை 7:30 மணிக்கு 27.3 டிகிரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது (இதற்கு முந்தைய சாதனை, ஜூன் 19, 2013 அன்று பெர்ன் நகரின் மெய்ரிங்கனில் (Meiringen) 25.3 டிகிரியாகப் பதிவானது).
பாசலில் வெப்பநிலை 40 டிகிரி அல்லது அதற்கும் அதிகமாக உயர்ந்தால், சுவிட்சர்லாந்தின் அல்ப்ஸ் மலைத்தொடரின் வடக்குப் பகுதியில் இந்த அளவு மீறப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சுவிட்சர்லாந்தின் வரலாற்றிலான அதிகபட்ச வெப்பநிலை சாதனை, அல்ப்ஸ் மலைத்தொடரின் தென்பகுதியில் உள்ள ஒரு வானிலை நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இது 41.5 டிகிரியாகும்.
இந்த வெப்பநிலை, ஓகஸ்ட் 2003-ல், குறிப்பாக மிசாக்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள கிராபுண்டன், க்ரோனோவில் பதிவு செய்யப்பட்டது.
மூலம்- swissinfo


