22.5 C
New York
Tuesday, September 9, 2025

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தியமைக்காக யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இருவர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கனடா செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்கிய யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இருவர் நீர்கொழும்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக போலி கடவுச்சீட்டு விவகாரங்கள் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் போலி கடவுச்சீட்டு முகவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்பாடு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles