14.5 C
New York
Wednesday, November 11, 2026

சீனா நாட்டு மின் குமிழ்கள் கண் பாதிப்பு இதுவரை 235 பேர் யாழ். போதனாவில் அனுமதி

பண்டத்தரிப்பு ஆலயத்தில் பயன்படுத்திய #சீனா நாட்டு மின் குமிழ்கள் பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர்கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண் பாதிப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

இதன் ஒரு கட்டமாக, ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.
கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது

Related Articles

Latest Articles