18.9 C
New York
Thursday, September 24, 2026

யாழ்ப்பாணத்தில் இரண்டு நாள் நிகழ்வுகளுக்கு சுவிஸ் தூதரகம் ஏற்பாடு.

சுவிற்சர்லாந்திற்கும் இலங்கைகும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, சுவிட்சர்லாந்து தூதரகம் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாள் நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.

இந்த நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது.

- Advertisement -

இதில் அரசுப் பங்காளர்கள், சமூகப் பிரதிநிதிகள், பங்காளர் அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்கள் ஒன்றிணைந்து, இலங்கையுடனான சுவிட்சர்லாந்தின் நீண்டகால ஈடுபாடு, குறிப்பாக அபிவிருத்தி ஒத்துழைப்பு, சமாதானம் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த பணிகளை நினைவுகூரவுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தி ஒத்துழைப்பு, சமாதானம் மற்றும் மனித உரிமைகள், மனிதநேய உதவிகள் ஆகியவற்றில் சுவிட்சர்லாந்தின் பங்களிப்பை மையமாகக் கொண்ட ஆவணப்படம் ஒக்டோபர் 3 ஆம் திகதி  சனிக்கிழமையன்று திரையிடப்படவுள்ளதுடன், இப்பணிகளுக்காகப் பங்காற்றியவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இவ்வருடத் தொடக்கத்தில் கொழும்பில் காட்சிப்படுத்தப்பட்ட”70 ஆண்டுகள் | 70 முகங்கள்” (70 Years | 70 Faces) புகைப்படக் கண்காட்சி,  யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்படும். இது ஏழு தசாப்தகால இருதரப்பு உறவுகளின் தனிப்பட்ட கதைகளை சித்தரிக்கிறது.

மேலும், ஒக்டோபர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று, எதிர்கால பொருளாதார அபிவிருத்தி, புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய தலைப்புகளில் நிபுணர்களின் குழு கலந்துரையாடல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு நிகழ்வு, சுவிற்சர்லாந்திற்கும் இலங்கைகும் இடையிலான பிணைப்பை வடிவமைத்த மக்களையும் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் அதே வேளையில், கலந்துரையாடல்கள், ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கி, இந்த ஆண்டுவிழா மைல்கற்களை ஒன்றிணைக்கும்.

Related Articles

Latest Articles