13.2 C
New York
Thursday, April 24, 2025

மீண்டும் பயணிகளை ஏமாற்றிய கப்பல் சேவை

நாகப்பட்டினம் –  காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் சேவை கடந்த 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் 19ஆம் திகதிக்கு கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் சேவையை ஆரம்பிக்க சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதால் பிற்போடப்பட்டது.

தற்போது சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் அந்தமானில் இருந்து வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், பிற்போடப்பட்டுள்ளதாகவும், அதனால்,  மே19 அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளுமாறும், செலுத்திய கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தக் கப்பலில் யாழ்ப்பாணத்துக்கு பயணிக்க, முன்பதிவு செய்திருந்த வர்த்தகர்கள், பயணிகள், இந்த அறிவிப்பினால் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

Related Articles

Latest Articles