16.6 C
New York
Thursday, November 5, 2026

இரண்டரை வயது குழந்தையை சுட்டுக் கொன்ற தந்தை தானும் உயிர் மாய்ப்பு?

சென் காலன்மாகாணத்திலுள்ள வாட்வில் (Wattwil) பகுதியில், தந்தை மற்றும் அவரது சிறு மகன் ஆகியோர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு கொலையைத் தொடர்ந்து நிகழ்ந்த தற்கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த சிறுவனுக்கு இரண்டரை வயது; தந்தைக்கு 33 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை காலை, பிரிந்து வாழ்ந்த தந்தை, ஒப்பந்தப்படி குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்கத் தவறியதாகச் சென் காலன் நகரக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தீவிர விசாரணைக்குப் பிறகு, அன்று மாலை வாட்வில் பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தந்தை மற்றும் சிறுவன் இருவரும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

காவல்துறையின் அறிக்கையின்படி, தந்தை கைத்துப்பாக்கியால் குழந்தையைக் கொன்று விட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

உயிரிழந்தவர்கள் 33 வயதுடைய நபர் மற்றும் இரண்டரை வயது சிறுவன் ஆவர். இவர்கள் இருவரும் குரோஷிய நாட்டுப் பிரஜைகள் மற்றும் சென் காலன் மாகாணத்தில் வசித்து வந்தவர்கள்.

சென் காலன் மாகாண அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் பேரில், இச்சம்பவம் குறித்த துல்லியமான சூழலைக் கண்டறிய மாகாணக் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles