சூரிச் நகரின் பிரதான ரயில் நிலையம், உலகின் சிறந்த ரயில் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
‘கொன்டே நாஸ்ட் டிராவலர்’ (Condé Nast Traveller) இதழின் வாசகர்கள் இந்த விருதை வழங்கியுள்ளனர். பயணத் துறையில் வழங்கப்படும் மிக மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.

‘ரீடர்ஸ் சொய்ஸ் அவார்ட்ஸ்’ (Readers’ Choice Awards) எனப்படும் இந்த விருதுகள், உலகளாவிய பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையில் மிகவும் பழமையான மற்றும் கௌரவமான விருதுகளில் அடங்கும்.
இவை சிறந்த ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், சொகுசு கப்பல் பயணங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை அங்கீகரிக்கின்றன.
‘கொன்டே நாஸ்ட் டிராவலர்’ இதழின் ஜெர்மன் மொழி வாசகர்கள் மட்டுமே இந்த வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இதற்கான விருது வழங்கும் விழா, வியாழக்கிழமை மாலை மியூனிக் நகரில் நடைபெற்றது.
சூரிச் பிரதான ரயில் நிலையம் (HB Zürich) முதலிடத்தைப் பிடித்து, உலகின் சிறந்த ரயில் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது 26 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
பெர்லின் பிரதான ரயில் நிலையம் 17.4 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், கியோட்டோ ரயில் நிலையம் 14.1 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
மேலும், சென் மோரிட்ஸில் உள்ள ‘சுவ்ரெட்டா ஹவுஸ்’ (Suvretta House) சிறந்த ஸ்கை (ski) ஹோட்டலுக்கான முதலிடத்தைப் பெற்றது. மாண்ட்ரூவில் உள்ள ‘கிளினிக் லா பிரெய்ரி’ (Clinique La Prairie) மருத்துவ ஸ்பா (Medical Spa) பிரிவில் மூன்றாம் இடத்தையும், அஸ்கோனாவில் உள்ள ‘ஹோட்டல் ஈடன் ராக்’ (Hotel Eden Roc) கடற்கரையோர ஹோட்டல் (Waterfront Hotel) பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
மூலம்- 20min


