13 C
New York
Thursday, April 24, 2025

தமிழில் வழிபட தமிழர்களே தடை -டென்மார்க்கில் தம்பிரான் சுவாமி தாக்கப்பட்டதன் பின்னணி.

டென்மார்க்கில் இந்து ஆலயத்திற்குள் அருட்சுனையர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதற்கு, சுவிட்சர்லாந்தின் சைவநெறிக் கூடம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் இருந்து சென்ற செந்தமிழ் அருட்சுனையர் சிவத்திரு. தம்பிரான் சுவாமிகள் மீது, நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக வேல்முருகன் திருக்கோவில் நிர்வாகம் டென்மார்க் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள் பல தடயங்களையும் விட்டுச் சென்றுள்ளதுடன், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தாக்குதலை சுவிட்சர்லாந்து சைவநெறிக்கூடமும், பொது அமைப்புக்களும் கண்டித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

இது குறித்து சுவிட்சர்லாந்து சைவநெறி கூடம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழர்கள் தமிழில் வழிபட தமிழர்களே தடையாக இருக்கும் இப்பேரிடர் நிகழ்வு தமிழுக்காக உயிர்நீத்த வலி சுமந்த மே மாதத்தில் நிகழ்ந்திருப்பது பெரும் கொடுமை.

இந்த வன்முறைக்கு அறிவு படைத்த நற்தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் தமிழ் வழிபாடு டென்மார்க் வேல்முருகன் திருக்கோவிலில் நடைபெற வழி செய்து வன்முறைக் குழுவிற்கு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இயற்கையும் இறையும் அறமும் கொடுமைக்காரர்களுக்கு தண்டனை வழங்கும்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles