28.7 C
New York
Monday, August 17, 2026

இலங்கையில் விரைவில் ஸ்டார் லிங் – ரணிலின் அழைப்பை ஏற்றார் எலோன் மஸ்க்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெஸ்லா மற்றும் ஸ்டார் லிங்க் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க்கை இந்தோனேசியாவின் பாலியில் நேற்று  நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ஸ்டார் லிங்க் செய்மதி இணையத் தொடர்பு வலையமைப்பை இலங்கையில் செயற்படுத்துவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள எலோன் மஸ்க் இலங்கையில் ஸ்டார் லிங் வலையமைப்பை ஆரம்பித்து வைக்க இந்த ஆண்டு கொழும்பு வருவதாக உறுதியளித்துள்ளார்.

ஸ்டார் லிங் இணைய வலையமைப்பு இலங்கையில் செயற்படுவதற்கு அனுமதி கொடுப்பதற்கு விரைவாக நடவடிக்கைகளை எடுப்பதாக, ஜனாதிபதி ரணில் உறுதி மொழி வழங்கியுள்ளார்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் பாலியில் நடைபெறும் பத்தாவது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் நேற்று முன்தினம் இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles