பெர்ன் மாகாணத்தின் கோனிஸ் நகரில் உள்ள ஒரு இறைச்சிக் கடையின் குளிர்பதன மற்றும் உறைபனி அமைப்புகள் இந்த மாத தொடக்கத்தில் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளானது.
அந்தக்கடை சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளது. “நாங்கள் திரும்பி வந்துவிட்டோம்!” என்று அந்நிறுவனம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.

‘லூத்திஸ் ஃப்ளீஷ்வாரன்’ (Lüthi’s Fleischwaren) என்ற அந்தக் கடை, பிராட்வொர்ஸ்ட் (bratwurst) மற்றும் ரொட்டியுடன், ஒரு திருவிழா உணவுக் கூடம் மற்றும் இசையையும் வழங்கும் என்று அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இணையவழித் தாக்குதல் காரணமாக, உறைபனி அறைக்குள் வெப்பநிலை 50 முதல் 70 டிகிரி வரை இருந்தது. இறைச்சி உண்மையில் வெந்துவிட்டது மற்றும் விலை அட்டைகள் உருகிவிட்டன என்று அந்த இறைச்சிக் கடையின் உரிமையாளர் அப்போது சுவிஸ் பொதுத் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அறைக்குள் நுழைய முடிந்தது. அனைத்து செயல்முறைகளும் உபகரணங்களும் சரிபார்க்கப்படும் வரை கடை தற்காலிகமாக மூடப்பட வேண்டியிருந்தது.
இறைச்சிக் கடை மீதான இந்தத் தாக்குதல், சுவிட்சர்லாந்தில் பகிரங்கப்படுத்தப்பட்ட இந்த வகையான முதல் இணையவழித் தாக்குதலாகும்.
சமீபத்தில், இணையக் குற்றவாளிகள் ஐரோப்பிய பல்பொருள் அங்காடிகளில் உள்ள குளிர்பதன அமைப்புகளைத் தாக்கியுள்ளனர். பெல்ஜியம், ஸ்வீடன், அயர்லாந்து, எஸ்டோனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள கடைகள் பாதிக்கப்பட்டவற்றில் அடங்கும்.
மூலம்- swissinfo


