3 C
New York
Monday, December 29, 2025

யாழ்ப்பாணத்தில் விரைவில் தேசிய வைத்தியசாலை! – ரணில் உறுதி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டடத்தை நேற்று முற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“யாழ். மாவட்டத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

அப்போது கொழும்பில் மாத்திரமன்றி தெற்கு, வடக்கு, மற்றும் மத்திய மாகாணங்களிலும் சிறந்ததொரு வைத்தியசாலைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

யாழ். போதனா வைத்தியசாலையை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியுமெனவும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles